அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு

 

அரியலூர், டிச.2:அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு ; ஒன்றிய / மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக < https://tamilnaducareerservices.tn.gov.in/ > மற்றும் Youtube Channel இணையதளம் < https://www.youtube.com/c/TNCareerServices > Employment உருவாக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இணையதளம் மற்றும் Youtube Channel-லில் TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிக்கப்பட்டுள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிக்காலியிடங்களுக்கு இணையவழி பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 4ம் தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்கள் விண்ணப்ப நகல்களுடன், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ,

தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு 9499055914 மற்றும் 04329 – 228641 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு