அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர், செப். 19: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர் கென்னடி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் படி, துணைக் காவல் கண்காணிப்பாளர் கென்னடி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) தலைமையில்“சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது.

இந்த முகாமில் மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள். இந்த முகாமில் மொத்தம் 16 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மனுதாரர்களின் குறைகளை கேட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்