அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சிறுபான்மையினர் தினம் கொண்டாட்டம்

அரியலூர், டிச.22: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுபான்மையினர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் தலைமை வகித்து, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல், கிராமப் புற சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித் தொகை.

உலமாக்கல் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தும், அதனை பெறும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அரியலூர் பங்குதந்தையர் டோம்னிக் சாவியோ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கௌரவச் செயலர் ஜான்பீவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை