அரியலூர் மாவட்ட அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்திகுறிப்பு: 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.50 சேர்க்கை கட்டணம் ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.185 . இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195 . இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை ஜூலை 13 முதல் நடைபெறுகிறது. தொடர்புக்கு: அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர். மின்னஞ்சல்- prlgitiariyalur@gmail.com அலைபேசி எண்: 9499055877, 04329-228408, அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம், மின்னஞ்சல்- prlgitiandimadam@gmail.com அலைபேசி எண்: 9499055879-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

 

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்