அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 308 மனுக்கள் கலெக்டரிடம் அளிப்பு

 

அரியலூர், அக். 22: அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 308 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி