அரியலூர் நகரில் சாலைகளில் சுற்றிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

 

அரியலூர்,நவ.18: அரியலூரில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அரியலூர் நகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றித் திரிவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன் பேரில் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜா உள்ளிட்டோர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பழைய மார்க்கெட் தெரு, ராஜாஜி நகர் பங்களா சாலை, அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், இனி வரக்கூடிய நாள்களில் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று நகராட்சி என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை