அரியலூர்-செந்துறை இடையே சாலை அகலப்படுத்தும் பணி கோட்டப்பொறியாளர் ஆய்வு

அரியலூர், ஆக.26: அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை கோட்ட பொறியாளர் வடிவேல் ஆய்வு செய்தார்.

அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைப்பணிகளை நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் அறிவுரைபடி, தலைமைப்பொறியாளர் நெடுஞ்சாலை வழிகாட்டுதல் படி, கோட்ட பொறியாளர் வடிவேல் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும், முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் இந்த ஆய்வின் போது உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் உடன் இருந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி