அரியலூர் அருகே தோல் கழனை நோய் தடுப்பூசி முகாம்

 

அரியலூர், ஆக. 10: அரியலூர் மாவட்டம் கடுகூர் ஊராட்சியில் இலவச தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கடுகூர் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் தொடங்கிவைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை அரியலூர் கோட்ட உதவி இயக்குனர் முருகேசன் முன்னிலை வகித்தார். கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அயன் ஆத்தூர், கோப்பிலியன் குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய கன்றுகள், கிடேரிகள் உள்ளிட்ட 600க்கும் அதிகமான மாடுகளை கொண்டு வந்து தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்த முகாமில் கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், ஓட்ட கோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், விளாங்குடி கால்நடை உதவி மருத்துவர் திவ்யா, அரியலூர் நடமாடும் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் திருநாவுக்கரசு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தினர். முகாமில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகளுக்கு தோல் காலை நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி