அரியலூர் அருகே சிறுவளூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

 

அரியலூர், டிச.2:அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில், பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு கிராமங்கள் முழுவதும் பேரணியாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் பள்ளி வளாகத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு லோகோ வடிவில், நின்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, செவ்வேல், தங்கபாண்டி, புதுப்பாளையம் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாரங்கபாணி, பயிற்சி ஆசிரியை சரண்யா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாசிரியர் செந்தில்குமாரன் செய்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து