அரியலூரில் மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி

 

அரியலூர்,நவ.24: அரியலூரில் மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர சைக்கிள் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூர சைக்கிள் போட்டி மாணவ – மாணவிகளுக்கு தனி, தனியே நடைபெற்றது. இதில், அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக போட்டியை மாவட்ட உடற்கல்வி இயக்குநர் தேகளீசன் தொடக்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் போட்டியை நடத்தினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை