அரியலூரில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி

 

அரியலூர், ஆக. 12: அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டிற்க்கான மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில் ”மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்னும் பொருண்மையில் கவிஞர்.மனுஷ்யபுத்திரன் சொற்பொழிவாற்றுகிறார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் உதவும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மாணவ, மாணவியர் நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டையும் தெரிந்துகொண்டு பயன்பெறுவதுடன் இதுகுறித்து மற்றவர்களிடமும் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசினார்.

பின்னர் “மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்னும் பொருண்மையில் கவிஞர்.மனுஷ்யபுத்திரன் பேசியதாவது, அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்றையதினம் நடைபெறுகிறது. தமிழ்க்கனவு என்பது தமிழர்கள் எப்படி இருந்தோம் என்பது குறித்தும் எப்படி இருக்கிறோம் என்பது குறித்தும், தமிழர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த கனவே மாபெரும் தமிழ்க்கனவாகும். கடந்த காலத்தை பற்றி யோசிப்பதும் ஒரு கனவாகும். தமிழகம் உயர்கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைத்த மாநிலம் தமிழ்நாடு ஆகும். பெண்கள் கல்வி அறிவில் தமிழகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். தமிழ்மொழி உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பண்டையகால நூல்களே இதற்கு சிறந்த உதாரணமாகும். தமிழர்கள் பண்டைய காலத்திலேயே மிகச்சிறந்த நாகரீகத்தை கொண்டிருந்தனர்.

இதேபோன்று தமிழ்மொழியும் மிகவும் தொன்மை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்தது. எனவே நமது தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட ஆட்சியரக மேலாளர்(பொது) குமரையா, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ரகுநாதன், மாவட்ட நிலை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு