அரியலூரில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்போது பச்சைமலையில் கொட்டித்தீர்த்த கனமழை விசுவக்குடி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரம்பலூர்: பச்சைமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் விசுவக்குடி அணையின் நீர்மட்டம் 21.80 அடியாக உயர்ந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 29ம்தேதி மாவட்ட அளவில் 160 மி.மீ அளவுக்கு அதாவது சராசரியாக 14.55 மிமீ மழை பெய்துள்ளது. குறிப்பாக தழுதாழை 42 மிமீ, வேப்பந்தட்டை 25மிமீ மழை பெய்துள்ளது. அதிலும் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கி வரும் பச்சை மலையில் கனமழை பெய்ததால் பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்றிலும், காட்டாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கி வரும், விசுவக்குடி கல்லாறு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மழை பெய்தால், விசுவக்குடி அணைக்கட்டு நிரம்பும். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். நீர்வள ஆதாரத்துறை மூலம் வெங்கலம் ஏரிக்கு நீரும் திறந்துவிட வாய்ப்புகள் இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு