அரியலூரில் குறுவட்ட விளையாட்டு போட்டி

 

அரியலூர்,செப்.2: அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற குறுவட்ட விளையாட்டுப் போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 30 பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ஒலிம்பிக் கொடியை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனினும், குறுவட்ட கொடியை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சந்திரசேகரனும் ஏற்றினர். போட்டி நடுவர்களாக அந்தந்தப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்திருனர்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை