அரியனேந்தல் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி ஆய்வு

பரமக்குடி, ஆக.31: அரியனேந்தல் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியனேந்தல் கிராமத்தில் பூங்கா நகர் செல்லும் சாலை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை உதவி பொறியாளர் முத்து கலாதேவி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரியனேந்தல் பஞ்சாயத்து கடந்த 2022ம் ஆண்டுக்கான பசுமை கிராமமாக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.15 லட்சம் மற்றும் விருதினை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து பெற்றுக்கொண்டார்.

கிராம மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் இக்கிராமம் அமைந்துள்ளது. பூங்கா நகர் செல்லும் சாலை பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக உயர்மட்ட மின் விளக்கு அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து வருவதாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரயுராஜேந்திரன் தெரிவித்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை