அரிமளம் அருகே பெத்த பெருமாள் கோயில் தேரோட்டம்

திருமயம். ஆக.30: அரிமளம் அருகே நடைபெற்ற பெத்த பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழாநிலை கோவில்பட்டி கிராமத்தில் பெத்த பெருமாள் சுவாமி கோயில், காடேரி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் 11 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டு ஆவணி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெத்த பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பெருமாள் பிரதிஷ்டையை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து பக்தர்கள் கோயிலின் முக்கிய வீதி வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை