அரவக்குறிச்சி பகுதியில் மக்காச்சோளம் பயிர் விளைச்சல் அமோகம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் விவசாயிகள் பரவவலாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மக்காச்சோள பயிர் நன்கு செழித்து வளர்ந்து பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக தற்போது மக்காச்சோள பயிர் நன்கு செழித்து வளர்ந்து பசுமை நிறைந்து காணப்படுகிறது. மக்காச்சோளம் 5 மாதம் பயிராகும். பயிரிட்டால் 5 மாதத்தில் மகசூல் தரும். ஓர் ஏக்கர் மக்காச்சோளம் பயிரிட்டால் 15 மூட்டை மக்காச்சோளம் மகசூல் கிடைக்கும். அதாவது 1,500 கிலோ மக்காச்சோள கதிர் அறுவடை செய்யலாம். 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விலை போகும். மக்காச்சோள விதைகளை வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் விரும்பினால் வெளிச்சந்தைகளில் தாங்களாகவே கொண்டு சென்று விற்றுக் கொள்ளலாம். தற்போது மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால நல்ல விலை கிடைக்கின்றது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி