அரவக்குறிச்சியில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வெறிநாய்கள் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. அரவக்குறிச்சி ஒன்றியம் வானம் பார்த்த பூமி. இதனால் விவசாயத்திற்கு அடுத்தபடியாக துணைத்தொழிலாக விவசாயிகள் ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக வெறிநாய்கள் இரவு நேரங்களில் பட்டிகளில் புகுந்து ஆடுகளை கண்டபடி கடித்துக் குதறுகின்றன. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம்,லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி வரப்பட்டி சந்திரமுர்த்தி தோட்டத்தில் 20 ஆடுகளை 8 வெறி நாய்கள் குதறியதில் ஆடுகள் இறந்துள்ளன. அதைத்தொடர்ந்து பூமதேவம் பகுதியை சேர்ந்த போஷ் என்பவரின் 3 ஆடுகளை கடித்துள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை