அரவக்குறிச்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி, ஜூன் 28: அரவக்குறிச்சியில் அரசு சார்பில் மின்மயானம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அரவக்குறிச்சி, பேருராட்சி பள்ளபட்டி நகராட்சி மற்றும் 20 ஊராட்சிகளும் உள்ளன. இதில் சுற்றி நூற்றுக் கணக்கான கிராமங்கள் உள்ளன. பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சியில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் நவீன பிரேத பரிசோதனை கூடங்கள் உள்ளன. அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்திலோ அல்லது வேறு காரணங்களால் உயிர் இழப்பவர்களை அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உயிரிழப்பவர்கள் உடலை தகனம் செய்ய மின்மயானம் இல்லை.

இதனால் பல கிமீ தொலைவிற்கு அப்பால் உள்ள கரூருக்கு கொண்டு சென்று தான் மின் மயானத்தில் தகனம் செய்து வருகின்றனர். இதனால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய பலமணி நேரம் ஆகின்றது. தேவையில்லா பணச் செலவும் ஏற்படுகின்றது. எனவே அரவக்குறிச்சி பகுதியை மைய்யமாக கொண்டு ஒரு மின்மயானம் அமைக்க வேண்டும் என அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு