அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி எடப்பாடி பி.ஏ கூட்டாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: சிறையில் வைத்தே விசாரிக்க திட்டம்

சேலம்: சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியின் பி.ஏ, அவரது கூட்டாளி ஆகியோர் மீது சேலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தபோது நேர்முக உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி. இவர் கூட்டாளி செல்வகுமாருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுள்ளார். இதையடுத்து கூட்டாளியான செல்வகுமார், யாரிடமெல்லாம் வேலைக்காக பணம் வாங்கினோம் என்ற பட்டியலுடன் சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எடப்பாடி உதவியாளர் மணி மீது புகார் கொடுத்தார். நெய்வேலியை சேர்ந்த இன்ஜினியர் தமிழ்செல்வனுக்கு, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் வாங்கியதும், இதில் 2 லட்சத்தை திரும்ப கொடுத்துவிட்டதாக அவர் புகார் கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் மணி, இவரது கூட்டாளி செல்வகுமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மணியையும், செல்வகுமாரையும் தனித்தனியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மணியும், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செல்வகுமாரும் ஜாமீன்கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் நடுப்பட்டி மணி, கூட்டாளி செல்லகுமார் ஆகியோர் மீது சேலம் 1வது கோர்ட்டில் குற்றப்பத்திகை தாக்கல் செய்தனர். அடுத்த மாதம் இருவரையும் சிறையில் வைத்தே வழக்கை முடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்….

Related posts

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்