அரசு விதிகளை பூர்த்தி செய்தால் பட்டாசு விற்பனை உரிமத்தை உடனடியாக தர வேண்டும்: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: அரசின் விதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு பட்டாசு விற்பனை உரிமம் வழங்க வேண்டும் என்று  உயரதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைப்பதற்கும், பட்டாசுகள் விற்பதற்கும் உரிமம் வேண்டி காவல் துறையிடம் வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு காலதாமதம் இன்றி பட்டாசு விற்பனை உரிமம் வழங்க வேண்டும். உரிமம் வழங்க தேவையின்றி காலம் தாழ்த்துவது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். மேலும் அது முறைகேட்டிற்கும் வழிவகுக்கும். காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி காவல் நிலைய அதிகாரிகளுக்கு முறையான விண்ணப்பங்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிமம் வழங்க அறிவுறுத்த வேண்டும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை