அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்

புதுக்கோட்டை, ஏப்.12: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது; தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்றையதினம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14,12,207 கோவிட் முதல் தவணை தடுப்பூசிகளும், 13,78,358 கோவிட் இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1,86,461 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசிகளும் என மொத்தம் 29,77,026 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 94 படுக்கைகளும் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என மொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 2023 நடப்பாண்டில் 23 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வென்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வென்டிலேட்டர்களும், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகளும், 148 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்ஸிஜன் உருளைகளும், திரவ ஆக்ஸிஜன் 4 கொள்கலன்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான N95 முகக்கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை