அரசு மானிய விலையில் விதை நெல்

 

சாயல்குடி, செப். 20: திருஉத்தரகோசமங்கை மற்றும் கடலாடி, முதுகுளத்தூர் வேளாண்மை துறை அலுவலகத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், விதை கிராமத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத்தில் நெல், குதிரைவாலி, கேழ்வரகு, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 120-140 நாட்களில் மகசூல் தரக்கூடிய கோ-51, ஏடிடி-45, ஆர்.என்.ஆர் ஆகிய ரக நெல்கள், பிபிடி 5204, என்.எல்.ஆர் சி.34449 மற்றும் 80 நாளில் மகசூல் தரக்கூடிய வம்பன்-8 ரக உளுந்து. 75-90 நாளில் மகசூல் தரக்கூடிய கோ-2 ரக குதிரைவாலி விதைகள், கோ-14, ரக கேழ்வரகு விதைகள் ஆகியவை 50 சதவீதம் 10, 5 சதவீதம் என ரகங்களுக்கு ஏற்ப மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விதைகள் வாங்கிச் செல்லும் விவசாயிகளுக்கு அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள் மற்றும் நுண்ணோ ட்ட உரங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெயரை பதிவு செய்து, தரமான விதைகளை வாங்கி பயனடைலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா