அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தினமும் மதிய உணவு

 

சூலூர், அக்.7: சூலூரில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் நேற்று துவக்கி வைத்தார். சூலூரில் தாலுகா அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 60 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளும், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மருத்துவமனை உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று திமுக சார்பில் துவக்கி வைக்கப்பட்டது. சூலூர் நகர திமுக சார்பில் வழங்கப்படும் அன்னதான நிகழ்ச்சியை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.  அரசு தலைமை மருத்துவர் கஜேந்திரன், மருத்துவர் செல்வராஜ், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், நகரச்செயலாளர் கௌதமன்,

பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் பசுமைநிழல் விஜயகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் சோலை கணேசன், பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து நாட்களிலும் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு மதிய உணவு தொடர்ந்து வழங்கப்படும் என நகர திமுக செயலாளர் கௌதமன் தெரிவித்தார்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை