அரசு மருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்ட செக்யூரிட்டி கைது

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூரைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மகன் பிரகாஷ்(24). இவர் மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக இருந்தார். தற்போது இம்மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை கூடங்கள் உள்ளிட்ட கூடுதல் கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளுக்கான தளவாட சாமான்களை ஒரு இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், பணியிலிருந்த பிரகாஷ், இங்கிருந்த காப்பர் வயரை திருடினார். இதனைப்பார்த்த சிலர் அவரை பிடித்து மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் கிளை மேலாளர் ரவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, பிரகாஷை கைது செய்தனர்….

Related posts

மேலூர் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் ஆய்வு

கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.56 லட்சம்

ஆக்கிரமிப்பில் சிக்கிய பூங்காவை மீட்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு