அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்

காரைக்குடி, நவ.24: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) கோட்டம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா 26ம் தேதி நடைபெற உள்ளது. தவிர 27ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை முதல் 27ம் தேதி வரை பக்தர்கள், பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்குகப்பட உள்ளது.

கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, காரூர், காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தில் பிற முக்கிய நகரங்களில் இருந்து 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வர வசதியாக மினி பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு