அரசு பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை மூலம் 24.84 லட்சம் மகளிர் பயணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு நகர் பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை மூலம் மகளிர் 24.84 லட்சம் பேர் வரையில் பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிரும் ஆண்களுக்கு இணையாக தன்னம்பிக்கையுடன் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தில் கடந்த 1989 இல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல், அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி, பயண அட்டையின்றி பயணம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆட்சி பொருப்புக்கு வந்ததும் முதல்வர் அரசு நகர் பேருந்துகளில் மகளிர்கள் கட்டணமில்லா பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த, கூலி வேலைக்குச் செல்லும் மகளிர்கள் அரசு நகர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய பணிமனைகள் மூலம் இயக்கப்பட்டு நகர் பேருந்துகளில்  24 லட்சத்து 59 ஆயிரத்து 876 மகளிர்கள் கட்டணமில்லா சலுகை மூலம் பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.          …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்