அரசு பெண்கள் பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தேங்கி இருக்கும் மழை நீரை உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் செவ்வாப்பேட்டை ரயில்வே நிலைய சுரங்கப்பாதை மற்றும் வேப்பம்பட்டு ரயில்வே நிலைய சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் மழைநீர் முற்றிலுமாக சூழ்ந்திருப்பததை ஆய்வு மேற்கொண்டு மழைநீரை உடனடியாக அகற்றும்படி வலியுறுத்தினார். மேலும் மழைநீர் தேங்கி இருப்பதால் தண்டவாளத்தை கடக்க பொதுமக்கள் சிரமப்படுவதால் மழைநீரை உடனடியாக அகற்றும் பணியை துரிதப்படுத்தும்படியும், அதுவரை வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்க முறையாக சீரமைக்கும்படியும் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய குழு தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணை தலைவர் எம்.பர்கத்துல்லாகான், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், எஸ்.ஜெயபாலான், ஜி.விமல்வர்ஷன், ஊராட்சி தலைவர்கள் டெய்சிராணி அன்பு, ராஜேஸ்வரி சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், திலிப்ராஜ், நிர்வாகிகள் ரவி, எட்வின், சரவணன், சசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி