அரசு பள்ளி வளாகத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

 

கூடலூர், ஜூலை 13: கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சுகாதார துறையினர், நகராட்சி சுகாதார பணியாளர்கள் முழு வீச்சில் செயல்பட்டு டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டனர். கொசுக்கள் பரவுவதை தடுக்க தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது டெங்கு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொசு மருந்து அடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து