அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்

பரமக்குடி,செப்.20: எமனேஸ்வரம் எஸ்என்வி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்என்வி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவ,மாணவிகள் 152 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மராஜ் வரவேற்றார்.

மாணவ,மாணவிகளுக்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்வில் பரமக்குடி நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்ற உறுப்பினர் கருப்பையா, அப்துல் மாலிக், வடக்கு நகர அவைத்தலைவர் முகமது சேட், நயினார் கோவில் ஒன்றிய துணைச் செயலாளர் திலகர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்