அரசு பள்ளி ஆண்டு விழா

தொண்டி, ஏப்.4: தொண்டி அருகே பெருமானேந்தல் அரசு தொடக்க பள்ளியின் 52ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. சேர்மன் முகம்மது முத்தார் தலைமையில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு ஜவகர் அலிகான் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை லதா வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிழக்கு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் பரிசு வழங்கினார். கவுன்சிலர் ரவிக்குமார், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை