அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் ₹5 லட்சம் நகைகள் கொள்ளை

புதுச்சேரி, அக். 21: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், கோபால் நகரை சேர்ந்தவர் வெங்கட் சூர்யநாராயணன். பிசினஸ்மேனான இவருக்கு ஆசிரியை வாரி சிவக்குமாரி (53) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது ஆந்திராவில் தசரா திருவிழா நடைபெற்று வரும், இதில் பங்கேற்பதற்காக வாரி சிவக்குமாரி தனது குழந்தைகளுடன் அங்கு சென்றுள்ளார். அவரது கணவர் வேலை நிமித்தமாக வெளிமாநிலம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு சென்ற அப்பெண், நேற்று முன்தினம் மீண்டும் அங்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு அலமாரி திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகிலுள்ள வாரி சிவக்குமாரியின், சகோதரரான வாரி லோவராஜூக்கு (50) தகவல் கொடுத்தார். அவர் வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு உடனே ஏனாம் காவல் நிலையத்தில் முறையிட்டார். வீட்டு அலமாரியில் இருந்த தங்கசெயின், நெக்லஸ், ஆரம் உள்பட 10 பவுன், 1 கிலோ வெள்ளி பொருட்கள் (மொத்த மதிப்பு ரூ.5 லட்சம்) கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுதொடர்பாக போலீசார், உடனடியாக வாரி லோவராஜிடம் புகாரை பெற்று வழக்குபதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்