அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம்

 

திருப்பூர், ஆக.2: திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக மறுசுழற்சி பொருட்களின் மூலம் புதியதாக விளையாட்டு மைதானத்தை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார்.

மேலும் மைதானம் அமைப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் பிரவாஷ் குமார் சுபுதி 10 பள்ளிகளுக்கு 20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலரும், கல்விக்குழு தலைவர் திவாகரன், கவுன்சிலர் சுபத்ரா தேவி, வங்கியின் மண்டல மேலாளர் சங்கரா சுப்பிரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ரவி பால் ஜேம் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி