அரசு பள்ளியில் பொங்கல் விழா

 

கரூர், ஜன. 13: தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கண்ணன், தங்கமணி, துணைத்தலைவர் பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அமுதாராணி, ஜூலிரீட்டாமேரி, தெரசாராணி, ஜெயபாரதி மற்றும் சுமதி ஆகியோர் செய்திருந்தனர். இந்த விழாவில், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை புடவை கட்டி வந்து கொண்டாடியதோடு, கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன் வரவேற்று நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை