அரசு பள்ளியில் பொங்கல் விழா

காரைக்குடி, ஜன. 14: காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் ஊராட்சி அலுவலங்களில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி தலைமை வகித்தார். பதிவாளர் பேராசிரியர் செந்தில்ராஜா, நிதி அலுவலர் பாண்டியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், ராஜாராம், சேகர், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தினவிழா மற்றும் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.

கல்லூரி அறங்காவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கானாடுகாத்தான் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் மற்றும் புகையில்லா போகி விழா பேரூராட்சி சேர்மன் ராதிகா தலைமையில் கொண்டாப்பட்டது. செயல் அலுவலர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். சின்னவேங்காவயல் அரசு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ராஜாமணி தலைமை வகித்தார். பளிள மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை