அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை மற்றும் ஆயுத களம் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உட்கோட்டை ஊராட்சி, உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆயுதகளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் உதவியாளர் ஆசைதம்பியின் ஏற்பாட்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், திமுக அயலக அணி தலைவரும், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் .மணிமாறன், மாவட்ட கழக பொருளாளர் ராஜேந்திரன்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமராஜன், ஒன்றிய பொருளாளர் முல்லைநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் பிருத்திவிராஜன், தொமுச ராஜேந்திரன், உட்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குமார், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டுறவு கல்வி நிதி, ஆண்டுசந்தா வழங்கல் அரியலூர் மாவட்டத்திற்கு நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் வருகை புரிந்தார். கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி, ஆண்டு சந்தா ரூ.38.46 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தினை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கான கொள்முதல் செய்ய பார்வையிட்டார். உடன் மண்டல இணைப்பதிவாளர், துணைபதிவாளர்,மேலாண்மை இயக்குனர், கூட்டுறவு சார்பதிவாளர்கள் இருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு