அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

 

உடன்குடி,ஆக.27: உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் செயல் படுத்தப்பட்டது. பரமன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீருடையார்புரத்தில் யூனியன் சேர்மன் பாலசிங் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர் செந்தில், கிளைச்செயலாளர்கள் பூங்குமார், விஜி, அப்துல், லத்தீப், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், பரமன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லங்காபதி, வார்டு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கேசகி மற்றும் பலர் கலந்து கொண்டனர். உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த காலை உணவு திட்ட தொடக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பிரின்ஸ் வரவேற்றார்.

உடன்குடி வட்டார கல்வி அலுவலர் டக்ளஸ் அல்பர்ட்ராஜ் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் அன்புராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயசுதா, துணைத்தலைவர் வேலம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலக சத்துணவு பிரிவு உதவியாளர் ரோஸ்லின், சி.ஆர்.பி பிரின்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கண்ணம்மா, மும்தாஜ், சண்முக ரமேஷ்,வனிதா, ஆனந்தி, சாந்திரூபி, சுவார்ட்ஸ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியை செல்வி நன்றி கூறினார். மெஞ்ஞானபுரம் ஊராட்சி மாணிக்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் கிருபாராஜாபிரபு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, பள்ளித்தலைமை ஆசிரியர் பத்மா, ஆசிரியர் சரோஜாகிரேஸ், லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் ஊராட்சி கல்லாமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைவர் சொர்ணபிரியா காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர் ராமலிங்கம் என்ற துரை, ஊராட்சி செயலர் அப்துல் ரசாக், பள்ளித்தலைமை ஆசிரியர் அம்மாச்சி, ஆசிரியர் ராணி, சலோமி, சாரதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். செம்மறிக்குளம் ஊராட்சி சத்யாநகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம் தலைமை வகித்து காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் விஜயன், கிளைச் செயலாளர் நோவா கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தினை நகராட்சி தலைவர் சிவஆனந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையர் கண்மணி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, நகர செயலாளர் வாள்சுடலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்: படுக்கப்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ். தலைவர் தனலெட்சுமி சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியராஜ் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா ஆனந்தி, வட்டார ஊர் நல அலுவலர் சுப்பம்மாள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தச்சமொழி பஞ். விஜயனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் காலை உணவு திட்டத்தை பஞ். தலைவர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். துணை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் நகோமி, ஊர் நல அலுவலர் சத்யா, சமுதாய வள பயிற்றுநர் மனோன்மணி, ஷாலினி, செந்தாமரை மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் காலை உணவு திட்ட பணியாளர் பட்டுராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இமானுவேல் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரபுரம் பஞ். துணை தலைவர் சுந்தரராஜ், காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆழ்வை. யூனியன் மண்டல ஏபிடிஓ மாலாதேவி, ஆசிரியர் பாலன், பஞ். செயலர் மனுவேல், சிகரம் அறக்கட்டளை இயக்குநர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் யூனியன் கவுன்சிலர் சஜிதா காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை எலிசபெத் ஜெயராணி, யூனியன் பணி மேற்பார்வையாளர் முருகன், வழக்கறிஞர் ஈசாக் இன்பராஜ், வார்டு உறுப்பினர்கள் ரங்கதாஸ், சுதாகர், அங்கன்வாடி அமைப்பாளர் நித்யா, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆறுமுக கனி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆறுமுகநேரி: மேல ஆத்தூரில் உள்ள பஞ். யூனியன் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பக்கீர் முகைதீன், மாவட்ட பிரதிநிதி ரகுராமன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, கிளைச்செயலாளர் அக்பர் மற்றும் நிர்வாகிகள் சின்னத்துரைபாண்டியன், ரெம்சியஸ், சீனிவாசன், சண்முகசுந்தரம், அரவிந்தன், லிங்கராஜ், அப்துல் காதர், மேரி கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். நாசரேத்: நாசரேத் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. புறையூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மாடசுவாமி தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை (பொறுப்பு) பெல்சியா வரவேற்றார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி க்கல்வி தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்