அரசு பணியில் 2 மகன்கள் இருந்தும் அனாதையாக வீட்டுக்குள் பூட்டி வைத்ததால் மண்ணை தின்று வந்த தாயின் பரிதாப நிலை: வீடியோ வைரல் அதிகாரிகள் மீட்டனர்

தஞ்சை: அரசு பணியில் இரண்டு மகன் இருந்தும் அனாதையாக இரக்கமற்ற நிலையில் வீட்டுக்குள் பூட்டி வைத்ததால் மண்ணை தின்று வந்த தாய் குறித்து வீடியோவால் அவர் கலெக்டர் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டார். தஞ்சாவூர் காவேரி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் திருஞானம். தூர்தர்ஷன் சேனல் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஞானஜோதி (73). இவரது மகன்கள் சண்முகசுந்தரம் (50), இளைய மகன் வெங்கடேசன். இதில் சண்முக சுந்தரம் சென்னையில் காவல்துறையில் டெக்னிக்கல் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.  வெங்கடேசன் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் பணியாற்றுகிறார். ஞானஜோதிக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.30 ஆயிரம் வரை வருகிறதாம். இந்நிலையில் சொத்து பிரச்னை காரணமாக, இரண்டு மகன்களும், தனது தாய் ஞானஜோதியை கவனிக்காமல் கைவிட்டுள்ளனர். மேலும், அவரை ஒரு வீட்டில் வைத்து வெளிக்கேட்டை பூட்டியுள்ளனர். இதனால் ஞானஜோதி மனநலம் பாதிக்கப்படவராக மாறி விட்டார். எப்போதாவது மகன்கள், பிஸ்கட் வாங்கிவந்து கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்று வந்துள்ளனர்.  இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஏதாவது கேள்வி எழுப்பினால் அவர்களிடம் இரண்டு மகன்களும் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களும் தங்களுக்கு என்ன என்பது போல் கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இதில் மனித நேயமிக்க அப்பகுதியை சேர்ந்த ஒருசிலர் அவ்வப்போது ஞானஜோதிக்கு உணவு வழங்கி வந்துள்ளனர்.  சரியான உணவு இல்லாதது, தனிமை என்று ஞானஜோதி எலும்பும் தோலுமாக மாறிபோய்விட்டார். தண்ணீர், உணவு முறையாக கிடைக்காமல், வீட்டின் தரையில் கிடந்த மண்ணை தின்று வாழ்ந்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த இதை வீடியோவாக எடுத்த சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன் என்பவர் வாட்ஸ் அப் மூலம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகாராக அனுப்பினார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு மூதாட்டி ஞானஜோதியை, தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் பாதுகாப்புடன் சென்று வீட்டு பூட்டை உடைத்து மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அத்துடன் தாயை கைவிட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மூதாட்டி ஞானஜோதி மீட்பதற்காக, வந்த அதிகாரிகளிடம் மூத்த மகன் சண்முகசுந்தரம், சொத்தையும், பென்சன் பணம் ரூ.30 ஆயிரத்தையும் தம்பி வெங்கடேசன் எடுத்து கொள்ளுவதாகவும் கூறி வாக்குவாதம் செய்தாரே தவிர தனது தாயின் இந்த நிலை குறித்து கொஞ்சமும் இரக்கமில்லாமல் நின்றதை கண்டு அப்பகுதியினர் கடும் கோபம் கொண்டனர்….

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி