அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு 15ம்தேதிவரை விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், ஜூலை 5: நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில் சேரலாம். நடப்பு ஆண்டிற்காக சேர்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த நேரடி சேர்க்கைக்கு வரும் பொழுது செல்போன், ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அவசியம் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணம் ஓர் ஆண்டு பிரிவு ரூ.235 விண்ணப்பக் கட்டணம்) மற்றும் இரண்டு ஆண்டு பிரிவு ரூ.245 செலுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 ஆகியவை வழங்கப்படும். மேலும் அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை