அரசு திரைப்பட கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

சென்னை: அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்  2021-22ம் கல்வி ஆண்டில், நான்கு ஆண்டு கால அளவிலான இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. அதன்படி இளங்கலை – காட்சிக்கலை  (ஒளிப்பதிவு) , இளங்கலை – காட்சிக்கலை (டிஜிட்டல் இன்டர்மீடியேட்),  இளங்கலை – காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை – காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை – காட்சிக்கலை (படத்தொகுப்பு) , இளங்கலை – காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்)  உள்ளிட்ட 6 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இன்று (12ம்  தேதி) முதல் செப். 6ம் தேதி வரை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் www.tn.gov.in  எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு செப்.9ம் தேதி  மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு