அரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை மருத்துவப் படிப்பு இடங்களை பிற மாநிலத்தவருக்கு ஒன்றிய அரசு தாரை வார்ப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல துறைகளில் வல்லுனர்களே இல்லாத நிலை உருவாகி விடும். இது தவிர்க்கப்பட வேண்டும். இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அகில இந்திய ஒதுக்கீடு தான். அதனால், மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்….

Related posts

சொல்லிட்டாங்க…

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி