அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். பொறியியல் கலந்தாய்வு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 955 பேராசியர்களுக்கு பணிவரன்முறை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் 41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்று நடத்தும் என்றும் முந்தைய அரசு கூறியது. 41 கல்லூரிகளுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் நிதி எதுவும் ஒதுக்கவில்லை. 41 கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 41 கல்லூரிகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய பேராசிரியர்களும் பயனடைவர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.பி.இ.முதல்கட்ட கலந்தாய்வு – 10,351 பேர் பங்கேற்றனர்:பொறியியல் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 14,524 பேரில் 10,351 மாணவர்கள் கலந்து கொண்டனர். 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர், 5648 பேர் அக்செப்ட் மற்றும் அப்கிரேடுக்காக பணம் கட்டியுள்ளனர். 5648 மாணவர்களுக்கும் நாளைக்குள் எந்த கல்லூரி என்ற உத்தரவு கிடைக்கப்பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.  …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்