அரசு கட்டிடம் சேதம்: இரண்டு பேர் கைது

 

பரமக்குடி,ஆக.9பரமக்குடி அருகே வெங்கிட்டன்குறிச்சி பொதுப்பணித்துறை கண்மாய் முத்துசெல்லாபுரம் பகுதியில் உள்ளது. முத்து செல்லாபுரம், வேந்தோணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இதனால் வேந்தோணி ஊராட்சி சார்பாக குளியல் தொட்டி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால், அதற்கு வெங்கிட்டன்குறிச்சி கிராம மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த மரங்களை வெட்டி, குடிநீர் தொட்டி, குளியல் தொட்டி மற்றும் அரசு கட்டிடங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்து பரமக்குடி டி.எஸ்.பி. சபரிநாதன், தாசில்தார் சாந்தி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து வேந்தோணி வி.ஏ.ஓ. சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா போலீசார் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, அரசு கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பெண்கள் உள்பட 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கணக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்தியேந்திரன்(40),வெங்கிட்டன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி(50) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி