அரசு ஊழியர்கள் சங்க அமைப்பு தின விழா தூத்துக்குடியில் ரத்ததான முகாம்

தூத்துக்குடி, மே 7: தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர்கள் சங்க அமைப்பு தின விழா தூத்துக்குடியில் ரத்த தான முகாமுடன் கொண்டாடப்பட்டது. விழாவில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ‘நானும் அரசு ஊழியர் தான். நான் ஐ.ஏ.எஸ்., ஆவதற்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் சுகாதார அலுவலராக தேர்வு செய்யப்பட்டு வேலை செய்தேன். அப்போது அரசு ஊழியர் சங்க கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன். கூட்டத்தில் ஊழியர்கள் தங்களின் குறைகளை எடுத்துரைப்பார்கள். சங்கத்திலுள்ள மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் பேசி தீர்வு காண்பார்கள். உயர் அதிகாரிகளுக்கும் கீழேயுள்ள ஊழியர்களுக்கும் இடையேயுள்ள பிரச்னைகள் தொடர்பான தீர்வுகளுக்கு அரசு ஊழியர் சங்கத்தின் பங்கு உண்டு. அரசு நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே அரசு ஊழியர்கள் ஒரு பாலமாக செயல்படுகிறார்கள்’ என்றார். இதில், மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் சங்க தலைவர் ஞானராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு