அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜூலை 3: ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, வட்ட தலைவர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி, பாதிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அத்தனையும், காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் ஐந்து சதவீதமாக குறைந்த பட்சத்தை கைவிட்டு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது.

Related posts

மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடங்களில் இரட்டை அடுக்கு மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்

வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.4.5 கோடியில் பூங்கா பேருந்து நிலைய பணி: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்