அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் மீண்டும் அமலாகுமா? மக்களவையில் அமைச்சர் பதில்

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படுமா என்பதற்கு மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பகதவ் கரத் பதில் அளித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் வழங்கப்படும். இதற்கு மாற்றாக, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒன்றிய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் தற்போது அமலில் உள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கின்றன. இந்நிலையில் மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத், ‘‘ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை. ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு தெரிவித்துள்ளன. பஞ்சாப் அரசு சார்பில் அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை’’ என்றார்….

Related posts

கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

மதுபான கொள்கை வழக்கில் விசாரணை தாமதமாவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க மணிஷ் சிசோடியா முறையீடு