அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 31 தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2021 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கொரோனா 2 வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே சமயம் தடுப்பூசி போடும் பணியினையும் தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கொரோனா பணி நிவாரண நிதி வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்த நிலையில் பலர் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கொரோனா சூழலில் ஏற்பட்டுள்ள நிதிசுமையை சமாளிக்க அரசு இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி