அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்

கரூர், ஜூலை 7: நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று கரூரில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவில் ஆலோசனைக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கா.முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஐவன் சரவணன், பன்னீர்செல்வம், சத்தியமூர்த்தி , செய்தி தொடர்பாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செய்தி தொடர்பாளர்கள் கே.வெங்கிடுசாமி வரவேற்றார்.கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். செயல்திறனற்ற பணியாளர்களுக்கு 5200 – 1900 தர ஊதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். புதிய பணி விதிகளை மாறுதல் செய்திட வேண்டும். ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

மாநகர சுகாதார செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். நகராட்சி வருவாய்க்கேற்ப தரம் உயர்த்த வேண்டும். புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25.07.2024 அன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது, 8.8.2024 அன்று அனைத்து நகராட்சி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது. 13.9.2024 அன்று நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் கரூர் மாநகராட்சி பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் குழந்தைவேல், செந்தில்குமார், ஆலிப் கிருபா, விஜயா, மாவட்ட பொறுப்பாளர்கள் ராமசாமி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை

குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள்