அரசு,தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டில் வழங்குவதற்காக 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அளிப்பதற்காக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.இந்நிலையில் 2022ம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7ம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முழு புத்தகம் என 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி – தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்