அரசுக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த்துறை அறிவிப்பு பலகை வைப்பு

பந்தலூர், ஏப். 5: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தை ஒரு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து தேயிலை பயிரிட்டுள்ளார். தற்போது அந்த இடத்தை அவர் விற்பனை செய்வதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்ஐ வாசுதேவன், விஏஒ அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு இடம் தமிழ்நாடு பூமிதான வாரியத்திற்கு சொந்தமானது எனவும், சட்ட விரோதமாக இந்த இடத்தை விற்கவோ, வாங்கவோ கூடாது என எச்சரிக்கை பலகையை அதிகாரிகள் வைத்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்