அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன் பெறலாம்; கலெக்டர் தகவல்

 

திருப்பூர், ஜூலை 3: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 10 ம் மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் 9,10,11,12 ம் வகுப்பு தவறியவர்களும் விண்ணபித்து தொழிற்கல்வி பெறலாம். ஐடிஐ-யில் பயின்றவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்புகள் நல்ல சம்பளத்துடன் பெற்று வழங்கப்படும்.

கல்விக்கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750- வழங்கப்படுவதுடன் இலவச பஸ் பாஸ், சைக்கிள், வரைபடக் கருவிகள், பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி, புதுமைப்பெண் திட்டம் மூலம் பிரதி மாதம் ரூ.1000 கூடுதலாக பெற்று வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு 99428 11559, 86680 41629 மற்றும் 99442 06017 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஜெயங்கொண்டம் பகுதி சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு

உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி

கலெக்டர், எஸ்பி முன்னிலையில் தீவைத்து எரிக்கப்பபட்டது